ஆட்சியை பிடித்தது அ.இ.ம.கா! புதிய தவிசாளர் தெரிவில் சம்பவம்.

 


பிரதேச சபையின் மூன்றாம் ஆண்டிற்கான (2021) பாதீடு தோற்கடிக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட தவிசாளர் பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்கான புதிய தவிசாளர் தெரிவு இன்று (12) சபையின் சபா மண்டபத்தில் காலை 10:00 மணிக்கு இடம்பெற்றது. இதன்போது 13 சபை உறுப்பினர்களின் ஆதரவுடன் கௌரவ உறுப்பினர் அப்துற்றஹீம் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார். 


ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா முசுலிம் காங்கிரசு கூட்டணியில் வெற்றிபெற்ற அங்கத்தவரான இவர் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் அ.இ.ம.காங்கிரசில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார். 


புதிய தவிசாளர் தெரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பொத்துவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான முசாரப் முதுநபீன் அவர்களின் தலையீட்டினால்தான் நான் தெரிவுசெய்யப்பட்டதாகவும், அ.இ.ம.காங்கிரசு கட்சியில் இணைந்ததன் மூலமாக இப்பதவியினை பெறக்கூடியதாக இருந்தது என தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார். இவ்வேளை பா.உ அவர்களும் கட்சி ஆதாரவாளர்கள் சகிதம் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 


முன்னாள் தவிசாளர் அப்துல் வாசித் அவர்களுக்கு ஆதரவாக 08 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0/Post a Comment/Comments

புதியது பழையவை