அடக்கம் செய்ய அனுமதி! பிரதமர் சபையில் தெரிவிப்பு.கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியை பிரதமர் மகிந்த ராசபக்ச வழங்கியுள்ளார். 


இன்று (10) பாராளுமன்றில் எஸ்.எம். மரிக்கார் கேள்விநேரத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக கோவிட் 19 காரணமாக மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்குவதாக தெரிவித்தார்.


வைத்தியர் சுதர்சனி பெர்ணான்டே புள்ளே அவர்கள் பாராளுமன்றில் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த விடயமான நீரினூடாக கோவிட் 19 வைரசு தொற்றாது எனும் கருத்தை அடிப்படையாக வைத்தே பாராளுமன்றில் எதிர்க்கட்சி உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மகிந்த ராசபக்ச இவ்வணுமதியை வழங்கினார். 


இதற்கு முன்னர் விசேட நிபுணர்கள் கொண்ட குழுவினர் அடக்கம் செய்வதற்கு அனுமதிக்காத நிலையில் அரசு இத்தீர்மானத்தை அறிவித்துள்ளது. 

0/Post a Comment/Comments

புதியது பழையவை