முஷாரப் எம்.பி யின் அழைப்பை ஏற்று பொத்துவில் முக்கியஸ்தர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைவு !

 


மாற்றம் விதைத்த பொத்துவில் மண்ணின் எதிர்கால நலனுக்காக இணைந்து பணியாற்றுவதற்காக நேற்றைய தினம் அ.இ.ம.கா. இன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் SMM. முஷாரப் அவர்கள் விடுத்த திறந்த அழைப்பை ஏற்று இன்று ஏராளமான பிரமுகர்கள் இணைந்து கொண்டனர்.

குறிப்பாக கட்சி பேதங்கள் களைந்து கௌரவ பிரதேச சபை உறுப்பினர்கள், ஆலிம்கள், உத்தியோகஸ்தர்கள், புத்துஜீவிகள் என பலரும் சேர்ந்து பணியாற்ற இணைந்து கொண்டனர்.

அந்த வகையில், ஶ்ரீ.ல.மு.கா. இன் கௌரவ பிரதேச சபை உறுப்பனர்களான MSM. மர்சூக், MH. அப்துல் றஹீம், ஶ்ரீ.ல.சு.க. இன் கௌரவ பிரதேச சபை உறுப்பினர் M. அன்வர் சதாத் உள்ளிட்ட மேலும் பல அரசியல் பிரமுகர்களும் இணைந்து கொண்டனர்.

அவ்வாறு இணைந்து கொண்டவர்களில் ஒரு தொகுதியினரின் புகைப்படங்களே இவை.

0/Post a Comment/Comments

புதியது பழையவை