பொத்துவில் முஸ்லிம்களை காட்டிக்கொடுக்கிறாரா அசாம் அமீன்? ஏன் இந்த வன்மம்? விவரம் உள்ளே!
முன்னால் பிபிசி சிங்கள ஊடகவியலாளர் அசாம் அமீன் தனது செய்திச்சேவையான நியூஸ் வயர் எனும் இணையத்தளத்திலும் தனது சொந்த முகநூல் பக்கத்திலும் பொத்துவிலில் இடம்பெற்ற விபத்து சம்பவம் குறித்து மிகைப்படுத்தப்பட்ட செய்தியினை வெளியிட்டிருந்தார. அதன் உண்மைத்தன்மை குறித்து இங்கு நாம் விவாதிக்கவில்லை. ஆனால் எங்களிடம் சில கேள்விகள் உள்ளது அசாம் அமீனிடம். 


1. பொத்துவிலில் எவ்வளவோ நிகழ்வுகள் அல்லது நில உரிமைப்போராட்டங்கள் இடம்பெற்றது அப்போதெல்லாம் உங்கள் ஊடகக்கண்கள் உறங்கிவிட்டதா...?


2. இலங்கை பூராகவும் விபத்துக்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் இடம்பெறுகிறது அப்போதெல்லாம் நீங்கள் பதிவிட்டுள்ளீர்களா? ஏன் பொத்துவிலில் இடம்பெற்ற விபத்தை மட்டும் நீங்கள் தூக்கிப்பிடிக்கின்றீர்? 


பதிலளிப்பாரா...? 


தனது இணையத்தளத்தின் செய்திப்பஞ்சத்திற்கு தீனிபோட்டு விளம்பரம் வழி காசுபார்க்கும் ஊடக நரித்தந்திரத்தை சூசுகமாக கையாண்டுள்ளார்.  சமூக வலைத்தள பிரபல்யத்திற்காகவும் லைக்குகளுக்காகவும் தேவையில்லாமல் ஒரு விபத்தை தேசிய அளவில் கொண்டுசென்று பொத்துவில் மக்கள் மத்தியில் வெறுப்பை வாங்கி கட்டிக்கொண்டுள்ளார். இதுபோன்ற பெண்வாணிப ஊடகங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.


மேலும் இவருக்கும் ஐக்கிய தேசியக்கட்சிக்கும் இடையிலாக கள்ளத்தொடர்பு காரணமாக இவரை பிபிசி சிங்கள செய்திச்சேவை இடைநிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த ஊடக நடுநிலை நக்கியின் இலட்சணங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்.0/Post a Comment/Comments

புதியது பழையவை