வாழும் போது வாழ்த்துவோம் - வைத்தியர் சஹீத்


வாழும்போது வாழ்த்துவோம் என்கிற தொனிப்பொருளில் பொத்துவிலின் வளர்ச்சியிலும் சுயமுன்னேற்றத்திலும் பல மைல்கற்களை எட்டிய பெருமக்களை வாழ்த்தியும் இளம் சமுதாயத்தின் வரலாற்று பெட்டக தொடராக தரவிருக்கின்றோம். இந்த இதழில் நாம் வாழ்த்தும் பெருமகன் வைத்திய கலாநிதி சஹீத் (MBBS, DCH, MD, MRCPCH, FRCPCH).


 • ஊரின் முதலாவது வைத்தியர், இலங்கையின் முதலாவது முஸ்லிம் சிறுபிள்ளை வைத்திய கலாநிதி.
 • பொத்துவில் மத்திய கல்லூரியின் பழைய மாணவன்.
 • 1957 ம் ஆண்டிலேயே கல்முனை பற்றிமா கல்லூரியில் இணைந்து கொண்டார்.
 • 1960 இல் மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரியில் இணைந்து கொண்டார்.
 • 1965 இல் கொழும்பு Alexandra கல்லூரியில் இணைந்து கொண்டார்.
 • கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு 1967 ம் ஆண்டு காலப்பகுதியில் தெரிவு செய்யப்பட்டார்.
 • உள்ளக பயிற்சியை 1972 இல் பதுளை வைத்தியசாலையில் நிறைவு செய்தார்.
 • கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 1973-1978 வரை கல்முனை தொடக்கம் பொத்துவில் வரையான நோயாளிகளை பராமரித்தார். 
 • 1978- 1981 வரை LRH வைத்தியசாலைகளில் கூட பணியாற்றி மருத்துவ சேவை செய்தார். பின்னர் உயர் கல்விக்காக United Kingdom இற்கு சென்றார். அங்கு DCH(London), MRCPCH(UK) இனை நிறைவு செய்தார்.
 • சவூதி அரேபியா மன்னர் குடும்ப சிறு பிள்ளை, சிசு வைத்திய நிபுனராக தொழிற்பட்டார். King Khalid University இல் Assistant Professor ஆகவும்,1989-2012 காலப்பகுதியில் Riyadh Security Forces Hospital இல் கடமை புரிந்தார். கத்தாரில் கூட ஊரின் புகழை உலகறிய செய்தவர். 
 • பள்ளிவாசல்கள், அரபுக்கல்லூரிகள், வீடுகள், பல மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள், பொத்துவில் மாணவர்கள் பயனடைய இரகசியமான தர்மமாக இவரால் செய்யப்பட்டுள்ளன. FRCPCH (UK) எனும் உயர் பட்டத்தை பெற்று Retired ஆனார்.
பணிவான பன்புகளுடனும், சிரித்த முகத்துடன் அன்பாக பழகக்கூடிய என்றும் இளம் வைத்தியர்கள் முன்னோடியாக எடுக்க கூடிய சிறந்த மனிதர். நிச்சயமாக வாழும் போது வாழ்த்த தகுதியானவர்.

- மூலதரவுகள் வைத்தியர் உவைஸ் பாருக் அவர்களின் முகநூலிலிருந்து எடுத்தாளப்படுகிறது.

0/Post a Comment/Comments

புதியது பழையவை