பாராளுமன்ற தேர்தல் - 2020 - திகாமடுல்ல மாவட்டம்.இவ்வாண்டு ஆகத்து மாதம் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில்  2019ம் ஆண்டின் வாக்காளர் கணக்கெடுப்பின் பிரகாரம் 513,979 பேர் வாக்களிக்க தகுதியுடையவர்களாக கணிக்கப்பட்டுள்ளனர்.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அம்பாறை, பொத்துவில், சம்மாந்துறை மற்றும் கல்முனை ஆகிய தேர்தல் தொகுதி உள்ளடங்குகின்றன. அம்பாறை மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளரின் தரவுகளின்படி பதிவுசெய்யப்பட்ட வாக்களார்களாக
 • அம்பாறை தொகுதியில் 177,144 உம் 
 • பொத்துவில் தொகுதியில் 168,793 உம் 
 • சம்மாந்துறை தொகுதியில் 90,405 உம் 
 • கல்முனை தொகுதியில் 77,637உம் 
வாக்களிக்க தகுதியுடையவர்களாகவுள்ளனர்.

இந்த தேர்தலில் திகாமடுல்ல மாவட்டம் சார்பாக 7 பேர் பாராளுமன்ற அங்கத்தவர்களாக தெரிவுசெய்யப்பட 20 பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் 34 சுயாதீன குழுக்கள் அடங்கலாக 540 பேர் வேட்பாளர்களாக களத்தில் குதித்திருக்கின்றனர்.

தேர்தலில் போட்டியிடும் பதிவுசெய்யப்பட்ட கட்சிகளின் பட்டியல் கீழே,
 • சிறிலங்கா பொதுஜன பெரமுன
 • ஐக்கிய தேசிய கட்சி
 • சமகி ஜன பலவேகய
 • அகில இலங்கை தமிழ் காங்கிரசு
 • அகில இலங்னை தமிழ் மகாசபா
 • எங்கள் மக்கள் சக்தி கட்சி
 • அகில இலங்கை மக்கள் காங்கிரசு
 • இலங்கை தமிழரசு கட்சி
 • ஈழமக்கள் ஜனநாயக் கட்சி
 • ஐக்கிய இடதுசாரி முன்னனி
 • ஜனசெத பெரமுன
 • தேசிய காங்கிரசு
 • தேசிய மக்கள் சக்தி
 • புதிய சனநாயக முன்னனி
 • புதிய சிஹல உருமய
 • முன்னிலை சோசலிச கட்சி
 • மவுபிம ஜனதா கட்சி
 • லிபரல் கட்சி
 • இலங்கை சோசலிச கட்சி
 • சிங்களதீப ஜாதிக பெரமுன

0/Post a Comment/Comments

புதியது பழையவை