வாய்ப்பில்லை ராஜா..! “கொரோனா வைரஸ் ஒருபோதும் அழியாமல் போகலாம்” - WHO பகீர்!“கொரோனா வைரஸ் ஒருபோதும் அழியாமல் போகலாம்” என்று உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலைக்கான இயக்குநர் மைக் ரயான் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

புதன்கிழமை அன்று செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய அவர், கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் என்பதை கணிக்கும் முயற்சிகளுக்கு எதிரான கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஒருவேளை கோவிட்-19 நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி கண்டறியப்பட்டாலும், அந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு “பெரும் முயற்சிகள்” தேவைப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
சமீபத்திய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் கிட்டத்தட்ட 43 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் மூன்று லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

“நமது சமூகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பரவி வரும் உட்பரவு வைரஸ்களில் ஒன்றாக கொரோனா வைரஸ் மாறலாம். மேலும், இது முற்றிலும் அழிய கூடிய நிலையை அடையாமலும் இருக்கலாம்” என்று காணொளி வாயிலாக ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் மைக் ரையன் கூறினார். 

“எச்.ஐ.வி. அழிக்கப்படவில்லை; ஆனால், அந்த வைரஸை கட்டுப்படுத்தும் வழிகளை நாம் கண்டறிந்துள்ளோம்.”

“கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும்” என்பதை கணிப்பதை தன்னால் நம்ப முடியவில்லை என்று அவர் கூறுகிறார்.

0/Post a Comment/Comments

புதியது பழையவை