பொத்துவில் தமிழ் கிராமங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட திட்டம்
பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தமிழ் கிராமங்களில் புதிய திட்டமொன்று நேற்றுமுன் தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நிலைமையால் கடந்த சில தினங்களாக மரக்கறிகள் விற்கப்படாமல் கிடக்கின்றன.

இதனால் விவசாயிகள் பெரும் நட்டத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அந்த வகையில் பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சில கிராமங்களிலும் வெண்டி மற்றும் கத்தரி உள்ளிட்ட மரக்கறிகள் விற்கப்படாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த கிராமங்களில் ஒவ்வொரு நாளும் விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளை கொள்வனவு செய்து தினமும் மரக்கறிகளை மக்களுக்கு நிவாரணமாக வழங்குவதற்குரிய குறித்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முதற்கட்டமாக நேற்றுமுன் தினம் சுமார் 500 Kg கத்தரிக்காய் மற்றும் 150 Kg வெண்டிக்காய் என்பவை பெறப்பட்டு நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளன.
செய்தி மற்றும் பட உதவி : தமிழ்வின் இணையம்.

0/Post a Comment/Comments

புதியது பழையவை