பொத்துவிலில் ஹிரு டீவியின் அடாவடி! மக்கள் நிலங்களை கையகப்படுத்த கலாட்டா


பொத்துவில் மக்களை வம்பிழுக்கும் ஹிரு டீவியும் தேரரும். அடாவடியாக மக்கள் நிலங்களை கையகப்படுத்த முஸ்தீபு.

பொத்துவில் முகுதுமகா விகாரைக்குச் சொந்தமான இடமென வெறுமனே கூறிக்கொண்டு மக்கள் குடியிருப்புக்காணிகளுக்குச் சென்று அவர்களை அவ்வப்போது மிரட்டும் வழக்கத்தை மீண்டும் அரங்கேற்றியிருக்கிறார் விகாராதிபதி வண. உடலமாத்தே ரத்னபிரிய தேரர். ஊரடங்கு அமுலிலுள்ளபோதே இவரின் அட்டூழியம் தொடர்ந்தவண்ணமாக உள்ளது.

இனவாதவெறியினை விதைக்கும் ஹிரு தொலைக்காட்சியின் சி.ஐ.ஏ எனும் நிகழ்ச்சியுடன் இணைந்து மக்கள் குடியிருப்புக்காணிகளை சட்டவிரோத நிலஆக்கிரமிப்பு, நிலகொள்ளை என வெறுப்பை உமிழ்ந்து விசமப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. மக்கள் தங்களின் காணிகளை துப்பரவு மற்றும் எல்லையிடும் வேலிகளை அமைக்கும் இச்சந்தர்ப்பத்தில் அவர்களை நேரடியாக சென்று அவர்களின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தி வம்பிழுக்கும் தோரணையில் சீண்டி வீடியோ படமெடுத்து வெளியிட்டு வருகின்றனர். பௌத்த மக்களிடையே வேண்டுமென்றே பொய்யான செய்திகளை பரப்பிவரும் ஹிருவின் அடுத்த விஸ்வரூபம். சட்டரீதியான ஆவணங்களுடைய மக்கள் காணிகளை விகாரைக்குச் சொந்தமென கூறிவரும் பொய்ப்பிரச்சாரத்தின் மற்றுமொரு வடிவம்தான் ஹிரு டீவியின் சீ.ஐ.ஏ நிகழ்ச்சியின் இன்றைய தலைப்பு.

விகாரதிபதியினை தாக்கவருவதுபோன்றும் ஊடகவியலாளரை வீடியோ படமெடுக்கவேண்டாமெனவும் இளைஞர்கள் கூறுவதனையும் தலைப்புச் செய்தியாக இட்டு சமூகஊடகங்கள் மற்றும் யூடியுப் போன்ற இணையத்தளத்தில் வெளியிட்டுவருகின்றனர். இசைக்கலைஞர் இராஜ் வீரவர்த்தனாவுடன் இணைந்து முன்பும் இதுபோன்ற விசமப்பிரச்சாரம் அரங்கேரியது குறிப்பிடத்தக்கது.

மேலும் விகாரைக்குச் சொந்தமான கடற்கரைப்பிரதேசத்தினை பொத்துவில் பிரதேச சபை சட்டவிரோத நில எடுப்பு செய்து முஸ்லிம் மயானபூமிக்கு ஒதுக்கியுள்ளதாகவும் தங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.0/Post a Comment/Comments

புதியது பழையவை