விகாரைக்குரிய காணிகள் சட்டவிரோத நிலப்பங்கீடு! விசாரணைகள் ஆரம்பம். - அமைச்சர் 'கறார்' உத்தரவு.காணிகள் மற்றும் காணி அபிவிருத்தி, சுற்றுச்சூழல் மற்றும் காட்டுவள அமைச்சர் S.M. சந்திரசேன அவர்களால் பொத்துவில் முகுதுமகா விகாரை மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சொந்தமான காணிகளை சட்டவிரோதமாக நிலப்பங்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் அமைச்சின் உயரதிகாரிகளால் விசாரணையொன்று முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் ஹிரு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் கரையோரம் பேணல் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் ஆகிய உயரதிகாரிகளுக்கான விசேட கூட்ட அழைப்பானையொன்றையும் அமைச்சகம் அனுப்பியுள்ளது.

மேலும் இவ்விடயங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக புதிய சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் பூஜை. மாகல்கந்தே சுதத்த தேரர் தலைமையிலான ஊடகவியலாளர் மாநாடொன்றும் அன்மையில் கொழும்பில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. 

0/Post a Comment/Comments

புதியது பழையவை