முகுதுமாகா விகாரைக்கு முப்பது ஏக்கர் நிலம் ஒதுக்கீடு! அமைச்சர் தடாலடிபௌத்தர்களின் கோரிக்கை நிறைவேறும் : 30ஏக்கர் காணிகள் வர்த்தமானி செய்யப்படும்

பொத்துவிலில் கடற்கரையை அண்டியிருக்கும் சர்ச்சைக்குரிய தொல்பொருள் ஆராய்ச்சி இடத்தில் நிலவிவரும் நீண்டகால பிரச்சினையான தொல்லியல் காணிக்கான எல்லையை வரையறுக்கின்ற சந்திப்பும் கலந்துரையாடலொன்றும் நேற்று(13/05/2020) சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு வளத்துறை அமைச்சில் இடம்பெற்றது.

மேற்படி சந்திப்பில் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு வளத்துறை அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன அவர்கள் கருத்து தெரிவிக்கையில், கடலோர எல்லைகள் மற்றும் தொல்பொருள் இருப்புக்கள் அனைத்தும் உள்ளடங்களாக குறைந்தது சுமார் 30 ஏக்கர்களை வர்த்தமானி செய்யுமாறு அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், அங்கீகரிக்கப்படாத நில ஆக்கிரமிப்புகளுக்கு அப்பால் தொல்லியல் பிரதேசம் எந்தவரையரையுமின்றி திறக்கப்பட வேண்டுமெனவும் 1951களில் 71ஏக்கருக்கு வர்த்தமானி அறிவிப்பு செய்யப்பட்டு 11ஏக்கர் அளவிலான நிலங்கள் கிராம விரிவாக்கத்தின் கீழ் எந்தவொரு தகவலும் இல்லாமல் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.மேலதிக விடயங்களாக, குறித்த பிரதேசத்தில் கவனயீனமாக இருந்த கரையோரம்பேனல் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவித்ததாகவும் அமைச்சர் தனது உரையில் தெரிவித்தார்.


மேற்படி செய்தியானது சிங்கள இணைய ஊடகமொன்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டதன் சாரம்சமாகும்.

தமிழில் – இப்னு முஹைதீன்

0/Post a Comment/Comments

புதியது பழையவை