பொதுவெளியில் கிருமிநாசினி தெளிப்பதால் கொரோனாவை அழிக்க முடியாது!


கொரோனா வைரஸை அழிப்பதற்காக பொதுவெளி மற்றும் சாலைகளில் கிருமிநாசினிகள் தெளிப்பது பயனற்றது என்றும், இது மனித ஆரோக்கியத்திற்கு கேடானது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பொது வெளியில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. சில இடங்களில் கட்டிடங்களையே கிருமிநாசினிகளால் குளிப்பாட்டுகிறார்கள்.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வைரஸை அழிப்பதற்காக சாலைகள் மற்றும் சந்தைப் பகுதிகள் போன்ற வெளிப்புற இடங்களில் கிருமிநாசினி தெளிப்பது மற்றும் சுத்தப்படுத்துவது பயனற்றது. இது கொரோனா வைரஸையோ அல்லது வேறெந்த கிருமிகளையோ கொல்லாது. ஏனெனில் கிருமிநாசினி அழுக்கு மற்றும் குப்பைகளால் செயலிழந்துவிடும்.

0/Post a Comment/Comments

புதியது பழையவை