ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
விகாரைக்குச் சொந்தமான நிலங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதை தடுக்கும் நோக்கத்துடன் கடற்படையினர் நாளை (15) முதல் முகுதுமகா விஹாரையில் நாளை முதல் நிறுத்தப்படுவர் என்றும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.
முகுதுமஹா விஹாரைக்கு சொந்தமான நிலங்கள் பறிமுதல் செய்யப்படுவது மற்றும் அப்பகுதியில் நடைபெற்று வரும் பிற மோதல்கள் குறித்து விசாரிக்குமாறு பாதுகாப்பு செயலாளர் தெரிவித்ததைத் தொடர்ந்து கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத் இன்று பிற்பகல் விஹாரை வளாகத்தில் சிறப்பு ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
பாதுகாப்புத் தலைமைத் தளபதி மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் சந்தனா விக்ரமரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.
72 ஏக்கர் நிலம் மகா விஹாரைக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது, ஆனால் 14 ஏக்கர் மட்டுமே மீதமுள்ளது.
விஹாரைக்கு சொந்தமான அனைத்து நிலங்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் இதன்போது உறுதியளித்தார்.
விகாரையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடற்படை மற்றும் காவல்துறை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் பாதுகாப்பு செயலாளர் அறிவுறுத்தினார்.
பாதுகாப்பு செயலாளர் மேலும் கூறுகையில், மாகாண ஆளுநர் அனுரதா யஹம்பத்தை சந்தித்து எதிர்கால நடவடிக்கை குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார்.
செய்தி மூலம்: ibctamil.com
கருத்துரையிடுக