பொய்யான செய்திகளை எவ்வாறு அடையாளம் காண்பது?முன்னைய காலங்களில் செய்திகள் அச்சு ஊடகங்கள் ஊடாக அல்லது இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக மாத்திரமே வெளிவந்து கொண்டிருந்தன. பொதுவாக அந்த ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் ஊடகவியலாளர்கள் ஊடாக உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்ததன் பின்னரே வெளியிடப்பட்டன. இன்றைய காலம் மேற்படி ஊடகங்களை விட சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்து இருக்கின்றது.

சமூக ஊடகங்களின் வரவின் பின்னர் எல்லாம் ஊடகங்கள் எல்லோரும் ஊடகவியலாளர்கள் என்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. எங்கோ ஓரிடத்தில் கண்ட செய்தியை சமூக ஊடகங்களில் தட்டி விடுவது இப்போது வழக்கமாகி விட்டது. எனவே எமக்கு வருகின்ற செய்திகளில் 90 வீதத்திற்கும் அதிகமானவை போலியான செய்திகளாகவோ அல்லது உறுதிப்படுத்தப்படாத செய்திகளாகவோதான் காணப்படுகின்றன. எனவே எமக்குக் கிடைக்கின்ற செய்திகள் குறித்தும் அவற்றின் நம்பகத் தன்மையை குறிக்கும் ஆராய்ந்து பார்த்தது அதனைப் பகிர்வது சங்கடங்களில் இருந்து எம்மைப் பாதுகாப்பதற்கு உதவியாக அமையும்.
பொய்யான செய்திகளை எவ்வாறு அடையாளம் காண்பது?

1. கூகுள் இணையதளம்

ஏதாவது ஒரு செய்தி நம்மை வந்தடையும் போது அந்த செய்தியின் ஒரு பகுதியை கொப்பி பண்ணி கூகுள் தேடல் பகுதியில் பேஸ்ட் (Past ) செய்து தேடல் பட்டனை அழுத்தும்போது அந்த செய்தி ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட , இணையதளம் என்பவற்றை அறிந்து கொள்ளலாம். இதனூடாக பழைய செய்திகள் புதிய வடிவில் பகிரப்படுவதனையும் அறிந்து கொள்ள முடியும்.

2. கூகுளே இமேஜ் சேர்ச்

கூகுள் நிறுவனம் ஒரு படத்தைப் பதிவேற்றி அந்தப் படங்கள் குறித்த செய்திகளையும் அந்தப் படம் முதல் முதலில் பதிவேற்றிய தினம் இணையதளம் என்பன குறித்த விவரங்களை பெறுகின்ற வசதியினை தந்திருக்கின்றது. ஏதோ ஒரு இடத்தில் கலவரம் என்ற தலைப்பில் உங்களிடம் ஒரு படம் வருமானால் அந்தப்படத்தை இந்தப் பக்கத்தின் ஊடாக தேடிப்பார்த்து படம் முதல் முதலாக பதிவேற்றப்பட்ட காலம் குறித்து அறிந்து கொள்ளலாம்.

அத்துடன் உங்களிடம் வரும் வீடியோவில் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அந்தப்படத்தை இந்தத் தளத்தில் தேடுவதன் ஊடாக குறித்த வீடியோ தொடர்பான விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

3. போலி செய்திகள் தொடர்பான உண்மைத்தன்மை குறிப்பிடும் இணையதளங்கள்.

போலி செய்திகளின் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்து அந்தச் செய்திகள் பதிவேற்றப்பட்ட வரலாறு குறித்து செய்திகளை பதிவு செய்யும் பல இணையத்தளங்கள் காணப்படுகின்றன. AFP செய்திச் சேவையின் Fact check இணையத்தளம் போன்ற பல இணையதளங்கள் இந்த சேவையை வழங்குகின்றன. இலங்கையில் Watchdog எனும் பெயரில் இது போன்றதொரு இணையதளம் இயங்கி வருகின்றது. இவ்வாறு இணையதளங்களின் உதவியுடன் போலி செய்திகளை அறிந்து கொள்ளலாம்.

கையடக்கத் தொலைபேசி ஊடாக Image search in mobile

https://www.prepostseo.com/reverse-image-search

எனும் இணைய முகவரியில் படங்களைப் பதிவேற்றி செய்தியின் உண்மைத் தன்மையை அறியலாம்.

4. செய்தி உரியவரின் பெயர்.

பொதுவாக ஒரு செய்தி பதியப்படும் போது அந்த செய்தியின் உரிமையாளர் தனது பெயரை குறிப்பிட்டடே அந்த செய்தியை வெளியிடுவார். செய்தியாளர்கள் யார் என்று பெயர் குறிப்பிடப்படாமல் வெளியிடப்படுகின்ற செய்திகள் பொதுவாகவே போலிச் செய்தியாகவே காணப்படும். எனினும் எங்கோ கிடக்கும் செய்திகளில் யாரோ ஒருவர் தனது பெயரையும் சேர்த்து அல்லது தனது இணையத்தளத்தின் பெயரைச் சேர்த்து அந்தச் செய்தியை பரவ விடுகிறது இப்போது காணமுடிகிறது. இந்த செய்தியின் இறுதியில் குறிப்பிடப்படும் பெயரை கூகுள் தளத்தில் தேடி பார்த்தல் ஊடக அந்த பெயருக்குரியவரின் விபரங்கள் மற்றும் அவரது முகநூல் ட்விட்டர் பக்கங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம். அந்தப் பக்கங்களில் குறிப்பிடப்படும் ஓரிரு செய்திகளை படிப்பதன் அந்தப் பேருக்கு உரியவரின் நம்பகத்தன்மை குறித்து அறிந்து! கொள்ளலாம்.

5. பகுத்தறிவு

செய்தியின் உள்ளடக்கத்தை எமது பகுத்தறிவை பயன்படுத்தி ஆராய்ந்து அறிந்து கொள்ளலாம். அது இருந்தா போலியான செய்திகளை அடுத்தவர்களுக்கும் அனுபப்புவமா என்ன?

இவ்வாறு செய்திகளை தேடிப்பார்த்து பொய்யான செய்திகள் குறித்த தகவல்களை கீழ்வரும் முகநூல் குழுமத்தில் பதிவிடுங்கள் அது பலருக்கும் உதவியாக அமையும்.

https://www.facebook.com/groups/880626575613021/

ராஃபி சரிப்தீன்

0/Post a Comment/Comments

புதியது பழையவை