ஊரடங்கு முடிந்த பிறகு உடனே இந்த விடயங்களை செய்யாதீர்கள்..!


கொரோனா தொற்று முடிந்ததும் இதையெல்லாம் செய்ய வேண்டும் என ஒரு பட்டியலே வைத்திருப்பீர்கள். ஆனால் அதில் சிலவற்றை ஊரடங்கு முடிந்த உடனே செய்வதைத் தவிருங்கள். ஏனெனில் கொரோனா வைரஸ் எங்கேயேனும் இருக்கக் கூடும். பாதிக்கப்பட்டவர்கள் இருக்கக் கூடும். எனவே உங்கள் ஆரோக்கியம் கருதி சில விடயங்களை செய்யாதீர்கள். அவை என்னென்ன பார்க்கலாம்.

சுற்றுலா பிளான் - Tour Plan : 

கொரோனா முடிந்ததும் கூண்டுக்குள் அடைபட்ட பறவைகள், கூண்டைத்திறந்ததும் பறப்பது போல சுற்றுலா செல்ல திட்டமிடாதீர்கள்.

கை கழுவுவதை தவறாதீர்கள் - Don't forget to wash your hands : 

ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா வைரஸ் ஏங்கேயேனும் உயிர் வாழக்கூடும். எனவே தற்போது கடைபிடிக்கும் கை கழுவும் பழக்கத்தை ஊரடங்கு முடிந்த பின்பும் பின்பற்றுங்கள்.


பார் கிளப் பார்ட்டி - Bar, Club Party : 

கிளப் செல்வது, பார்ட்டிகளில் பங்கேற்பது போன்ற கேளிக்கை விடயங்களைத் தவிருங்கள்.

முகக்கவசம் - Face Mask :

ஊரடங்கிற்குப் பின்பும் வெளியே சென்றால் முகக்கவசம் பயன்படுத்துவதைத் தவறாதீர்கள். சுகாதாரத்தைக் கடைப்பிடித்தல் : ஊரடங்கிற்குப் பின் வெளியே சென்றால் இருமல், தும்மல் வரும் போதும் கைக்குட்டை அல்லது கைகளால் முகத்தை மூடுவதைக் கடைபிடியுங்கள்.

நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்தல் - Postponing the Programs :

வீட்டில் உடனே திருமணம் போன்ற பெரிய நிகழ்ச்சிகளை நடத்தி உறவினர்களை வரவேற்பதைத் தவிருங்கள்.

0/Post a Comment/Comments

புதியது பழையவை