தேசிய மட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பொத்துவில் மத்திய கல்லூரி சம்பியனாக தெரிவு.


என் மத்திய கல்லூரித்தாயின் கர்ச்சனை உங்கள் காதுகளில் விழுகிறதா!!


பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பொத்துவில் மத்திய கல்லூரித்தாய் சம்பியனாக முடிசூடிம் முரசொலி எங்கள் ஆழ்மனதை ஆனந்த வெள்ளத்தால் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது.


எல்லாப்புகழும் அழ்ழாஹ்வுக்கே!! அல்ஹம்துலில்லாஹ்!!


எத்தனை ஆடுகளங்கள்!

ஏராளம் போட்டிகள்!!


கோட்டம், வலயம், மாவட்டம், மாகாணம், தேசியம் என அத்தனை மட்டங்களையும் மிக கச்சிதமாக வெற்றியோடு கடந்து முடித்து சம்பியனாக வென்று வரும் கம்பீரம் கனதியானது.


நாமும் நமது மண்ணும் இன்னுமொரு தடவை பெருமிதம் கொள்கிறோம்.


ஒட்டுமொத்த கிழக்கு மண்ணுக்கும் வெற்றியை பறைசாற்றுகிறோம்!!


தேசியம், சர்வதேசம் என சாதனை வீரர்களை ஏற்றுமதி செய்யும் பிராந்தியத்தின் கம்பீரத்தால் விளைந்த எமது மண் இன்னுமொருதடவை சாதனையாளர்களை பிரசவித்திருக்கிறது.


இம்முறை தேசிய மட்ட கிரக்கெட் சம்பியனாக தெரிவு செய்யப்படுவதற்கு துவக்கம் முதலே எத்தனையோ இரவுகளையும் பகல்களையும் அர்ப்பணம்

செய்து இந்த அளப்பறிய அறுவடையை பெற்றுக்கொள்ள துணையாய் இருந்த கல்லூரியின் முதல்வர் கலந்தர் ஹம்ஸா சேர் அவர்களுக்கும் உடற்கல்வி ஆசிரியர் எம்.எம். அஸ்மி சேர் அவர்களுக்கும் உள்ளம் நிறைந்த நன்றிப் பூக்களை அள்ளித்தூவுகிறோம்.


-சல்மான் லாபீர்

0/Post a Comment/Comments

புதியது பழையவை