அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக வீசப்படுகின்ற அம்புகளுக்கு மார்பைக் கொடுக்கவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன்; எஸ். எம்.எம்.முஸர்ரப்

இன மத பேதமின்றி மக்களுக்கான சேவைக்கு தன்னை அர்ப்பணித்துச் செயற்படுகின்ற அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக வீசப்படுகின்ற அம்புகளுக்கு மார்பைக் கொடுத்து தாங்கிக் கொள்வதற்காகவுமே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருக்கின்றேன் என ஊடகவியலாளரும்,சட்டத்தரணியுமான எம்.எம்.முஸர்ரப் கூறினார்.

இவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அக்கட்சியின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளருக்கான நியமனக்கடிதத்தை அமைச்சர் றிஷாட் பதியுதினிடமிருந்து பெற்றுக் கொண்ட நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(02-09-2018)மாந்தைப்பிரதேசத்தில் நடைபெற்றது இங்கு களப்பயணத்தை மெற்கொண்டிருந்த அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்:-

அரசியலின் ஊடாக உரிமைகளை வென்றெடுக்க முடியுமாயின் அதுதான் ஒரு உயர்தர அரசியலாகும் அந்த அரசியலைச் செய்யும் களம் இலங்கையிலும்,கிழக்கு மாகாணத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் காத்துக் கொண்டுதான் இருக்கின்றது.தியாகம்,அர்ப்பணிப்பு இது எல்லாவற்றையும் விட மக்கள் மீதான உண்மையான நேசத்தைக் கொண்ட தலைவராக இவரை நான் பார்க்கின்றேன்.

பல அரசில் தலைமைகள் எனக்கு அழைப்பு விடுத்த போது சில மாதங்களாக நான் யோசித்து எடுத்து முடிவுக்கு அமையவே மக்கள் மீதான உண்மையான நேசத்தைக் கொண்ட தலைமையாக இனங்கண்டதன் காரணமாகவே தீர்க்கமான ஒரு முடிவுடன் இணைந்திருக்கின்றேன் தொடர்ச்சியாக அவருடன் நான் இணைந்திருப்பேன் என்பதை உறுதியாகச் சொல்லிக் கொள்கின்றேன்.

எனது இந்த அரசியல் பயணத்தில் எனது அனைத்துத் தோழமைகளும் என்னோடு இணைந்து புதிய வரவுகளையும் நான் எதிர்பார்க்கின்றேன் அத்துடன் இந்தக்கட்சியையும் சமூகத்திற்காக குரல் கொடுக்கின்ற தலைமைக்கும் உயிர் கொடுப்பதற்கும் நீடித்த ஒரு உழைப்பை அவருக்குக் கொடுப்பதற்கும் நாங்கள் காரணமாக இருக்க வேண்டும்.

நான் ஒரு விமர்சகனாக இருந்து இப்பொழுது ஒரு படைப்பாளியாக மாறியிருக்கின்றேன் இந்தப்படைப்பு ஒரு சமூகத்தைக் கட்டமைக்கின்ற உன்னத படைப்பாக இருக்கும் அதற்கு எங்களது அமைச்சர் உறுதுணையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது என்றார்.

(பி.எம்.எம்.ஏ.காதர்)

0/Post a Comment/Comments

புதியது பழையவை