ஆப்பிளை தொடர்ந்து அமேசான் நிறுவனத்தின் மதிப்பு ஒரு டிரில்லியன் டாலராக உயர்வு!

வாஷிங்டன் : ஆப்பிள் நிறுவனத்தை தொடர்ந்து அசோன் நிறுவன மதிப்பும் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டிள்ளது. இ காமர்ஸ் சந்தையில் முன்னணியில் உள்ள அமெரிக்க நிறுவனமான அமேசான் சில ஆண்டுகளாக வளர்ச்சியை அடைந்து வருகிறது. இந்நிலையில், அமேசான் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை கடந்துள்ளது. அமெரிக்க பங்குசந்தையில் அமேசான் நிறுவனத்தின் பங்கு ஒன்று புள்ளி 4 சதவீதம் வரை உயர்ந்து ஆயிரத்து ஐம்பது டாலராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆயிரம் டாலராக இருந்த அமேசான் நிறுவனத்தின் ஒரு பங்கு 10 மாதங்களில் இருமடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 2ம் தேதி ஆப்பிள் நிறுவனம் இந்த சாதனையை படைத்தது. இதனை தொடர்ந்து சில வாரங்களில், இரண்டாவதாக அமேசான் நிறுவனமும் சாதனை பட்டியலில் இணைந்துள்ளது. 24 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் சியாட்டில் நகரில், வெறும் 400 சதுர அடி பரப்பளவு கொண்ட ஒரு அறையில் ஆரம்பிக்கப்பட்ட அமேசான் நிறுவனம், இன்று உலகையே உள்ளங்கைக்குள் கொண்டு வரும் அளவுக்கு பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது. அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ் உலகின் முதல் நிலை பணக்காரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

புதியது பழையவை